குச்சவெளியில் கடையில் நின்ற பெண்ணின் சங்கிலியை பறித்த திருட்டுக் கும்பல்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=eu3TZ4XUrAk[/embedyt]

திருகோணமலை, குச்சவெளி – கும்புறுபிட்டி பகுதியில் இன்று (15.02.2025) பகல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கும்புறுபிட்டியில் உள்ள ஒரு கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து நின்ற கும்பல், கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திடீரென பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

அச்சத்துடன் கூடிய பெண் உடனடியாக உதவிக்காக கூச்சல் விட, அருகிலிருந்தோர் திருட்டு கும்பலை பிடிக்க முயன்றனர். எனினும், அவர்கள் வேகமாக ஓடிச் சென்று மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடையில் இருந்த கண்காணிப்பு கமெரா (CCTV) பதிவுகள் சேகரிக்கப்பட்டு, திருடர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி உடனடியாக காவல்துறையை அறிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்