காலாவதியான தீயணைப்புக்கருவியால் வைத்தியசாலையில் பதற்றம்

Date:

வைத்தியசாலையில் காலாவதியான தீயணைப்பு கருவிகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) தீயினால் ஏற்பட்ட அவசர நிலையை கட்டுப்படுத்த முயன்றபோது, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் இயங்காமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அவசர நேரத்தில் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்திய வேளை அவை செயல்படாத காரணத்தால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அருகிலமைக்கப்பட்ட புதிய விசேட பெண்கள் வைத்தியசாலை கட்டிடத்தில் பொருத்தப்பட்ட தீயணைப்பு கருவிகளை கொண்டு, தீயினை கட்டுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தருணத்தில், பொது மக்கள் அதிகரித்த அதிருப்தி குறித்து தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் தீயணைப்பு கருவிகள் காலாவதியாகி, பல ஆண்டுகள் கடந்தபோதும் அவை மாற்றப்படாத நிலை அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாக மக்களும் கூறுகிறார்கள்.

மேலும், புதிய கட்டிடத்தில் தீயணைப்பு கருவிகள் இல்லாவிடில், தீ விபத்து பெரிதாக பரவியிருக்கலாம் என்றும் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.

வைத்தியசாலைகளில் தீயணைப்பு கருவிகள் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான ஓர் விடயமாகும். எனினும், காலாவதியான கருவிகள் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருப்பது கூடிய வருத்தத்தையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்