சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் திறப்பு விழா

Date:

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது நேற்றைய தினம் (12) மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது

சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமாகிய திரு சி.அ ஜோதிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்ததிருந்தனர்.

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர், வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் யாழ் மாவட்ட மீனவ ஒத்திழைப்பு இயக்க தலைவருமான முரளிதரன், கவிஞர் யாழ்மருதன், பிரதேச வர்த்தகர்கள், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் போன்றவர்களும் இந்நிகழ்வில் சிறப்பித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்