இலங்கையில் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கி, புதிய வரி விகிதங்களை அரசாங்கம் அமுல்படுத்தியதை தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி தனது வாகன வரிசைக்கான புதுப்பிக்கப்பட்ட விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
வழங்கப்பட்ட புதிய விலைகள், தற்போதைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள், அரச வரிகள், 18% வெற் வரிகளைத் தவிர (VAT) மற்றும் பிற தேவையான கட்டணங்களை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், மிட்சுபிஷி நிறுவனத்தின் பல்வேறு மாதிரிகள் கொண்ட வாகனங்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:
– மிட்சுபிஷி அட்ரேஜ் – ரூ.11.23 மில்லியன்
– மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர் – ரூ.14.99 மில்லியன்
– மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர் கிராஸ் – ரூ.16.1 மில்லியன்
– மிட்சுபிஷி அவுட்லேண்டர் ஸ்போர்ட் – ரூ.15.675 மில்லியன்
– மிட்சுபிஷி எக்லிப்ஸ் கிராஸ் – சுமார் ரூ.19 மில்லியன்
– மிட்சுபிஷி எல்200 – ரூ.18.135 மில்லியன்
– மிட்சுபிஷி மொன்டெரோ ஸ்போர்ட் – ரூ.49.58 மில்லியன்
இந்த புதிய விலைப்பட்டியல், வாகன சந்தையின் நிலவரத்திற்கேற்ப மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய வரி திட்டத்தின் கீழ் வாகனங்களை வாங்குவதற்கு முன்னர், சரியான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், விலைமாற்றங்கள் வெளிநாட்டு நாணய நிலவரத்தினை பொறுத்து மாறக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.