சம்பூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பேச்சிமுத்து கிருபரெத்தினம் அவர்கள் 12.02.2025ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலங்சென்ற இராசேந்திரம், வேலாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசையா, அழகம்மா தம்பதினரின் அன்பு மருமகளும், கிருபரெத்தினம் (ஓய்வு பெற்ற வருமான மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், அருள்வாணி (ஆசிரியர்), அருளானந்தி (முன்னாள் ஆசிரியர் காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், ரமணராஜ் (உதவி முகாமையாளர்), (MF நேஷன் லங்கா ஃபைனான்ஸ், மட்டக்களப்பு), விபுணராஜ் (மா/நீர்ப்பாசன திணைக்களம், குச்சவெளி) ஆகியோரின் அன்பு தாயாரும், காந்தரூபன், ரவிச்சந்திரன் (லண்டன்), புவிதா, ஹம்ஷிகா (தேசிய சேமிப்பு வங்கி, திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சுவிக்ஷன், திகழினி, புகழினி, அகழினி, அஸ்விந்த், வகிஷ்விந்த், யஷ்விதா, மோகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், தங்கவேல் குணராசா, காளிராசா, தியாகராசா தேவமலர், கோமளாதேவி, அன்னலெட்சுமி, குகராசா ஆகியோரின் அன்பு சகோதரியும், ஹேமாமதுரவாணி, கௌரீஸ்வரி, செல்வராணி, தர்மேஸ்வரி, மோகனசுந்தரம், சந்தரலிங்கம், காலஞ்சென்ற தங்கதுரை, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற தெய்வநாயகி, தங்கரெத்தினம், இராஜேஸ்வரி, கைலைநாதன், குணராசா ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13.02.2025ம் திகதி, வியாழக்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக சம்பூர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும். ஏற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்