Pagetamil
இலங்கை

வவுனியாவில் சந்தேகத்துக்கிடமான சடலம்!

கடைத்தொகுதி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் குறித்த சடலம் இன்று (11-02-2025) காலை மீட்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, பசார் வீதியில் இயங்கும் ஒரு நகை பட்டறையில் வேலை செய்துவரும் 40 வயதான சுப்பையா ஆனந்தன் என்பவர், நேற்றிரவு தொழிலின் பொருட்டு வீட்டிலிருந்து கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால், இன்று காலை பட்டறை அமைந்துள்ள மாடிக்கட்டடத்தின் கீழ்தளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததாக சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment