போலி தகவலை நம்பி வழக்கு பதிவு செய்த பலாலி பொலிசார்!

Date:

போலி தகவலொன்றை நம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பலாலி பொலிசார் வழக்கு தாக்கல் செய்த சுவாரஸ்ய சம்பவமொன்று நடந்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியிருந்தார்.

இதன் பின்னர் – ‘விகாரையை இடிக்க வாரீர்’ என்று அவர் அழைப்பு விடுத்தது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்விடயத்தை அறிந்ததும், அவரது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக, குறித்த செய்தி போலியானது என பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

குறித்த விடயத்தை மறுத்து எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பலாலி பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கஜேந்திரகுமாருக்கு 14 ம் திகதிக்கு அழைப்புக்கட்டளை  அனுப்பப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்