காதலர் தினம் அன்று விசேட பாராளுமன்ற அமர்வு

Date:

எதிர்வரும் 14 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு ஒன்றினை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு இன்றைய தினம் (10) தீர்மானம் மேற்க்கொண்டுள்ளது. இந்த முடிவை பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவித்தார்.

இந்த அமர்வில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மசோதா தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் முடிவை அறிவிக்க உள்ளனர்.

இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலியின் தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விசேட கூட்டத்திற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மசோதாவை பரிசீலிக்க, பெப்ரவரி 14 ஆம் திகதி தொடர்புடைய அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்