மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், பிள்ளையாரடி பகுதியில், வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இளம் ஊடகவியலாளர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு வீதி விளம்பர பலகை ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதி குமாரன் மற்றும் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் சமீப காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இளம் ஊடகவியலாளர்கள் இந்த சமூக சேவையை முன்னெடுத்துள்ளனர்.
இளம் ஊடகவியலாளர்கள் சமூக மாற்றத்திற்காக மேற்கொள்ளும் இந்தப் புகழ்பெற்ற முயற்சிகள் மேலும் பரவலாக பரவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.