கரீபியன் கடலில் நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை!

Date:

கரீபியன் கடலில் 7.6 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது, கேமன் தீவுகளின் தென்மேற்கில் சுமார் 209 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி நேற்று மலை 6.23 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) சில கரீபியன் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன. கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ போன்ற நாடுகள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

சுனாமி எச்சரிக்கை காரணமாக, கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் வழிமுறைகளுக்கு உள்ளூர் அதிகாரிகளின் அறிவிப்புகளை கவனிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்