தேவையான பொருட்கள்:
ஊறவைத்த உழுந்து – 2 கப்
சிறிதாக அரிந்த பெரிய வெங்காயம் -1
சிறிதாக அரிந்த பச்சை மிளகாய் – 1
சிறிதாக அரிந்த கோவா – 1 கப்
சிறிதாக அரிந்த கறிவேப்பிலை – 2 நெட்டு
பெருஞ்சீரகம் – 2 தே.க
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
– உழுந்தை நன்கு கழுவி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
– மிதமான அளவு எண்ணெயுடன் சிறிதாக அரிந்த பெரிய வெங்காயம், சிறிதாக அரிந்த பச்சை மிளகாய், சிறிதாக அரிந்த கோவா, சிறிதாக அரிந்த கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் என்பவற்றை அதில் போட்டு மிதமாக தாளித்துக்கொள்ளவும்.
– அதனுடன் தேவையான உப்பு சேர்த்து கிளறி எடுக்கவும்.
– அரைத்து வைத்த உளுந்துடன் தாளித்து வைத்த கூட்டை நன்றாகக்கலந்து வடைக்கு ஏற்ற பதத்தில் எடுத்துக்கொள்ளவும்.
– ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தயாரித்து வைத்திருந்த உளுந்துக் கலவையை சிறிது சிறிதாக எடுத்து, ஓட்டை போட்டு 90% பொரிந்து வரும் வரை நன்றாக பொறித்து வெளியே எடுக்கவும்.
– வெளியே எடுத்த வடையை சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு மீளவும் திரும்ப பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
– சுவையான கோவா வடை தயார்!