செளத்பார் புகையிரத நிலைய வீதியை புனரமைக்க கோரிக்கை

Date:

மன்னார் மாவட்டம் செளத்பார் புகையிரத நிலைய வீதி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இந்த வீதியை புனரமைப்பதற்காக முன்பே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படாமல், ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், புகையிரத பயணிகள் மற்றும் சாந்திபுரம், செளத்பார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பாதையை சரியாக பயன்படுத்த முடியாத நிலையில், தினசரி பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னனியில் அவ் அப்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், பயன்படுத்த முடியாத வீதியை சீரமைத்ததாக காட்டி அரச பணத்தை வீணாக்குவதை விடுத்து, வீதியை முறையாக புனரமைத்து தர வேண்டும் என அப் பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்