மட்டக்களப்பில் மின்சாரத் தடை – கடும் அவதியில் மக்கள்

Date:

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இல்லாமல், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

2024 நவம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால், குறித்த பகுதிகளுக்குச் செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து, மின்சாரக் கம்பிகள் அறுந்து மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், பாடசாலை மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

இரவில் யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் அட்டகாசங்களால், மக்கள் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் நிலத்தில் மின்சார தாக்கம் ஏற்படுத்தும் அபாயத்தால், பாதைகளில் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்தவிதமான தீர்வும் எடுக்கப்படவில்லை என மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, சரிந்து வீழ்ந்த மின்சார தூண்களை உடனடியாக சரிசெய்து, மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்