குழந்தைக்குள்ளே குழந்தை

Date:

பிறந்து 3 நாட்களேயான குழந்தையின் கருவில் கரு இருந்த சம்பவம் ஒன்று அமராவதி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்தது.

அங்கு வைத்தியக்குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமராவதி பிரதேச மருத்துவமனையில் வைத்திய நிபுணர் ஒருவரின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்களேயான குறித்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வைத்திய நிபுணர், மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு கரு இருந்ததாகவும், அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர் என்றும் கூறினார்.

அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர், பேசுகையில், ‘கருவில் கரு’ என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்று இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்