முந்தெனி ஆறு திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் இன்று (06) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுளா சமரகோன், பொறியியலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் குறித்த செயற்றிட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கான முக்கிய விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தெனி ஆறு திட்டம், நீர் மேலாண்மை மற்றும் விவசாய அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.




