மஹிந்த ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மனு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு நீக்கப்பட்டமைக்கு எதிராக, அதை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை 2025 மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அந்த மனுவின் அடிப்படையில், உரிய விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றம் உரிய தீர்மானங்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.