திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

Date:

திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறப்பில் ஆணாக இருந்துவிட்டு, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைத் தடுக்க இந்த புதிய நிர்வாக உத்தரவு இன்று (05) கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவருக்கான பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார், அதில் ஒன்று ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களைக் கோரிய அதிகாரப்பூர்வமான உத்தரவு என குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21)...

மட்டக்களப்பில் 13 பிடியாணைகளுடன் 3 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது!

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடங்களாக தலைமறைவாகி...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த பல்கலை மாணவியை மீட்டது எப்படி?: பள்ளத்தாக்கில் இறங்கியவரின் அனுபவம்!

உலகின் இறுதி முனையான ஹோர்டன் சமவெளிக்கு களப்பயணம் சென்றிருந்த மருத்துவ மாணவி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்