இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

Date:

ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா நேற்று (03) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய துறைகளில் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது. ருவாண்டா, இலங்கையுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ச்சியாக பேண விரும்புவதாக உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆபிரிக்க விவகார பிரிவின் பணிப்பாளர் நாயகம் வருண வில்பத ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்