சிறுவர்களின் உண்மையான புகைப்படங்களை மாற்றி ஆபாசமாக உருவாக்கும் “Nudeify AI” போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதை தடுக்கும் இந்த சட்டம், சிறுவர் பாதுகாப்புக்காக அமுல்படுத்தப்படும் முதல் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Internet Watch Foundation வெளியிட்ட தகவலின்படி, 2024ம் ஆண்டில் AI மூலம் உருவாக்கப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகப் படங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. “Nudeify” போன்ற தொழில்நுட்பங்கள் சிறுவர்களின் புகைப்படங்களை மாற்றியமைத்து ஆபாசமாக உருவாக்குவதால், இது சமூகத்திற்கும் மனிதவியலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
புதிய சட்டத்தின்படி, AI மூலம் சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவது, பகிர்வது, வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்தும் குற்றமாக கருதப்படும்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இணையத்தில் இத்தகைய அபாயங்களை கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.