யாழ்ப்பாணம், குளப்பிட்டி வீதியைச் சேர்ந்த பார்வைக்குறைபாடுடைய 80 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜசுந்தரம் கமலாதேவி நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியடைந்திருந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்கமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் அவரது சடலத்தை மீட்டு மரண விசாரணைகள் மற்றும் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டார்.
பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1