இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டிக்க, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (04) நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி நீதி கோரி வரும் உறவினர்கள், இலங்கை அரசு சுதந்திரத்தை கொண்டாடும் போது தமிழர்கள் இன்னமும் அநீதிக்கும், அழிவிற்கும் உள்ளாகி வருகிறார்கள் எனக் குற்றம் சாட்டினர்.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு, கருப்பு கொடிகள் ஏந்தி, ஆதங்கக் குரலை வெளிப்படுத்தி நீதி கோரிய போராடடத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1