28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா நேற்று (03) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய துறைகளில் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது. ருவாண்டா, இலங்கையுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ச்சியாக பேண விரும்புவதாக உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆபிரிக்க விவகார பிரிவின் பணிப்பாளர் நாயகம் வருண வில்பத ஆகியோர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment