ஹட்டன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த முதியவரின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் உதவுமாறு திம்புளை பத்தன பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமராவதி என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவரை கருணாகரன் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் தற்போது இல்லை.
இதனிடையே, வைத்தியசாலையில் அனுமதித்த கருணாகரன் என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இதுவரை அவர் தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், உயிரிழந்த முதியவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1