இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனியர்கள் 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் அமுலில் இருந்த போதும், மேற்கு கடற்கரை பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்தின் ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 20 கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளதோடு, ஒரே நேரத்தில் ஏராளமான குண்டுகள் வீசப்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளித்ததுள்ளது.
மேலும், 100க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 40க்கும் அதிகமான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.