ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Date:

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘வார் 2’ படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். பிரசாந்த் நீல் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன்பின் ‘சலார் 2’ இயக்குவதாக இருந்தது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஜூனியர் என்.டி.ஆர் படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படமாக உருவாகும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்