Pagetamil
கிழக்கு

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

விசேட தேடுதல் நடவடிக்கையில் கடற்படையும் பொலிஸாரும் ஈடுபட்டதன் விளைவாக தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவரை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர் கந்தளாய், மீனவகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பதும் உறுதியாகியுள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், குறித்த நபர் மற்றும் மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் மற்றும் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!