27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
சினிமா

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

மதுரையில் இயக்குநர் அருண்குமாரின் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தினை இயக்கியுள்ளார் அருண்குமார். இவருக்கு இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது. இதில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், பால சரவணன், தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

2014-ம் ஆண்டு வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தினை இயக்கினார் அருண்குமார். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ படத்தினை இயக்கினார் அருண்குமார். அப்படம் பெரும் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து சிறுஇடைவெளி எடுத்து சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்தினை இயக்கினார். அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

‘சித்தா’ படத்தினைத் தொடர்ந்து, தற்போது விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தினை இயக்கியுள்ளார். இதன் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘‘சமந்தா விவகாரத்தில் நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ – நாக சைதன்யா ஆதங்கம்

Pagetamil

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment