ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பயணித்த நால்வரும் காயமடைந்து, முதலில் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1