25.4 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால்
விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி
சில நாட்களாக துண்டிக்கப்பட்டமையால் தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்..

கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கு குழாய் வழி குடிநீர் விநியோகம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூநகரி போன்ற கடும் நீர் நெருக்கடியுள்ள
பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முற்றுமுழுதாக குழாய் வழி நீரையே
அனைத்து தேவைகளுக்கும் நம்பியிருந்த நிலையில் சில நாட்களாக நீர்
விநியோகம் மேற்கொள்ப்படவில்லை, இதனால் தாம் கடும் நெருக்கடியை
சந்தித்தாகவும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உத்தியோகத்தர்கள்
பலரும் நீர் இன்மையால் மிக மோசமாக பாதிப்புக்கு முகம் கொடுக்க
நேரிட்டதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள் இது தொடர்பில் தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது

கிளிநொச்சியில் அமைந்துள்ள தங்களது நீர் சுத்திகரிப்பு நிலையத்தின்
உற்பத்தி திறனை விட மக்களின நீர் பாவனை அதிகமாக காணப்படுவதனால் சம
நேரத்தில் எல்லா பிரதேசங்களுக்கும் நீரை வழங்க முடியாதுள்ளது. இதன்
காரணமாக மட்டுப்படுத்த அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது என
தெரிவிக்கின்றனர்

ஆனால் முற்றுமுழுதாக இந்த நீரையே நம்பியுள்ள எங்களுக்கு சீரான நீர்
விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் கோரிக்கை
விடுகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!