Pagetamil
இலங்கை

டெங்கு அபாயத்தில் சிக்கி தவிக்கும் மேல் மாகாணம்

இவ் வருட ஆரம்பம் முதல், 30 நாட்களில் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ள நோயாளர்களில் மேல் மாகாணத்திலே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 1 முதல் 30ம் திகதி வரையான காலப்பகுதியில் 4,761 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 2,156 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இந்த மாகாணத்திலேயே காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், வட மாகாணத்தில் 250, மத்திய மாகாணத்தில் 431, மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 394 நோயாளர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் டெங்கு தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!