திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும், வெருகல், கோமரன்கடவல மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய போட்டியாளர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களின் இயலுமைக்கு ஏற்ப அனைத்து போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று, வெற்றியை நோக்கி போட்டியிட்டனர்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2025/01/475746615_640792865125495_1085011057945782622_n.jpg)
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேலதிக அரசாங்க அதிபர் சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார். மேலும், இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.