மாவையின் இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பு: செந்தில் தொண்டமான்

Date:

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயது வரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.

போருக்கு முன்னரும் பின்னரும் என இவரது அரசியல் நகர்வுகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்திலும் இவரது பணி காத்திரமாக இருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. அன்னாரின் இழப்பு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இந்த உறவு தொடர்ந்தது. மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து அவர் பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்துள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் மக்களுக்கும் இ.தொ.கா சார்பாக தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர் விட்டு சென்ற பணிகளை தமிழரசு கட்சி தொடர வேண்டும்.” என்றும் செந்தில் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்