கண்டி நகரின் பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகளின் ஒரு கூட்டம் திடீரென உள்ளே புகுந்து, ஒரு அறையில் இருந்த சிற்றுண்டிப் பொருட்கள், படுக்கை விரிப்பை உட்பட உள்நாட்டு மதுபானம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளன.
தமது திருட்டைத் தொடர்ந்து, அதே ஹோட்டலின் கூரையில் ஆவலாக பாட்டிலைத் திறந்து மதுபானத்தை ஊற்றியும், சிந்தியதை குடித்தும், நிறைவெறியில் விளையாடியதையும் அங்கு இருந்த மக்கள் தங்களின் கெமராக்களில் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்களில், ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொன்று அதை சுவைப்பதையும், அருகிலிருந்த மற்றொரு குரங்கு உணவைச் சாப்பிடுவதையும் வெளிப்படுத்துகிறது.
இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1