மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Date:

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய சரித்திர நாயகன் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவையிட்டு வெளியிட்ட அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் என்னோடு பாராளுமன்றத்தின் இருந்த ஒருவர். அவரை பற்றி நான் நன்றாக அறிந்தவன் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் தைரியமாக குரல் கொடுத்தவர் என்பதுடன் மிகவும் நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பதுடன், தான் எப்போதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் என்றும் என்றும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா ஐயாவின் மறைவு தமிழர் வரலாற்றில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கும் என்றும் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்