கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வின்போது பரிதாபகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் இருந்த ஒரு நபர், தன்னைக்காப்பாற்றியவர்களின் முயற்சியைப் புறந்தள்ளி மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போயுள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இளம் குடும்பஸ்தர், தீர்த்தோத்சவ திருவிழாவிற்காக அங்கு வந்திருந்த போது, மதுபோதையில் குளத்தில் பாய்ந்துள்ளார். அங்கு இருந்த சிலர் உடனடியாக அவரை காப்பாற்றி வெளியே எடுத்துள்ளனர். ஆனால், அவர்களது முயற்சிகளை பொருட்படுத்தாமல், மீண்டும் குளத்தில் குதித்த அவர், நீண்ட நேரமாக நீரில் மேலே வராததால் காணாமல் போயுள்ளார்.

தற்போது, அப்பகுதி இளைஞர்கள், பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து, காணாமல் போன அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




