அநுரவின் வருகைக்கு எதிரான போராட்டங்களுக்கு தடைகோரும் பொலிசார்

Date:

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற உள்ளது

spot_imgspot_img

More like this
Related

கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? – மறுப்பு தெரிவித்து விளக்கம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்​கில் சின்​னத்​திரை...

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என...

ஜம்மு கஷ்மீர் முதலமைச்சரின் திருமண அறிவிப்பு

காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பிரபல பத்திரிகையாளரும் ஒளிபரப்பாளருமான நிதி ரஸ்தானை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்