25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் கலையரங்கில் பிரமாண்டமான வகையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும் எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கேற்றார். விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், மங்கல விளக்கு ஏற்றப்பட்டு, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவப்பட்டது.

பிறந்த நாள் நிகழ்வின் போது, புற்றுநோய், சிறுநீரக நோய், பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு, கலைஞர்களையும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில், யாழ். அரசாங்க அதிபர், எம்.ஜி.ஆர் பேரவையின் உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தினருடன் பல கிராம சேவகர்கள், எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அளவில் பங்கேகேற்றிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment