நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துறைமுகத்திலிருந்து இதுவரை மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், புதைகுழி அமைந்த பகுதியில் மண் அகற்றும் பணிகள் முந்தைய தடைசெய்யப்பட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றன. மேலும் உடல்கள் இருக்கக்கூடும் என்ற ஆய்வாளர்களின் நம்பிக்கையுடன், மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வுப் பணிகளில் தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் குழு ஈடுபட்டுள்ளது.

இப்பணிகள் கடந்த 2024 செப்டெம்பர் மாதத்தில் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டதாக இருந்தது. புதிய நிதி கிடைத்ததையடுத்து, தற்காலிகமாக 20 நாட்களில் அகழ்வுப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேராசிரியர் சோமதேவ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2024 செப்டெம்பர் மாதத்தின் தொடக்கத்தில் முதற்கட்ட அகழ்வுப் பணிகளின் போது, குறைந்தது இரண்டு எலும்புக்கூடுகள் மற்றும் மேலும் நான்கு மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதைகுழி, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் காரணமாக எதிர்பாராதவிதமாக ஜூலை 2024 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த அகழ்வுப் பணிகள் முழுமையாக முடிவடைய, அரச தரப்பில் நிதி மற்றும் நிபுணத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்