திருகோணமலை லக்ஷ்மி நாராயணர் ஆலயம் முன்பாக நீர் தேங்கியிருக்கும் வெறும் காணியில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி நிரூபர் ஒருவரால் அடையாளங்காணப்பட்ட முதலை, மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இருப்பதால், இம்முதலை அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியானது, குடியிருப்பு பகுதியாகவும், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக காணப்படும் பகுதியாகவும் காணப்படுவதால் மக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பிற்கு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை வனஜீவராசி அதிகாரிகள் இதனை கவனித்து, குறித்த பகுதியில் உரிய நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமாகும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1