மட்டக்களப்பில் மின்சாரத் தூணில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் நேற்று இரவு 8.00 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. வேகமாக வந்த வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்து விலகி மின்சாரத் தூணுடன் மோதியதில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்தது.
இந்த விபத்தில் வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன், மின்சாரத் தூண் சேதமடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சார தடை ஏற்பட்டது. சம்பவத்துக்கு பின்னர் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து குறித்து கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1