பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்தச் செய்த குற்றச்சாட்டில், தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் தகவலின்படி, மதுபோதையில் இருந்த குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்மதுளை நகரில், காரில் வந்து இறங்கிய மாணவியை சந்தேகத்துடன் அப்பகுதி குழுவொன்று விசாரித்தபோது, அவர் மதுபானம் அருந்தியிருந்தமை கண்டறியப்பட்டது.
காரில் இருந்த மற்றொரு நபரும் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணையில், அந்த நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என உறுதி செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் காணப்பட்ட குழுவினர், சந்தேகநபரை தாக்கியதுடன், அவரை பெல்மதுளை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதை தொடர்ந்து அவரை மீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1