கிளிவெட்டியை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா (ஆற்றங்கரை பழமை விநாயகர் ஆலய அறங்காவலர்) நேற்று (26.01.2025 ஞாயிற்றுக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா பத்தம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற சுப்ரமணியம் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற மஞ்சுளாதேவி அவர்களின் அன்புக் கணவரும், டினேஸ்(லண்டன்), விக்னேஸ் (ஆய்வு உத்தியோகத்தர்), கலைவாணி(மருத்துவப்பீட மாணவி) அவர்களின் பாசமிகு தந்தையும் கோணலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்), மனோரஞ்சிதம், உதயகுமார்(IOC) மற்றும் காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், புவனேஸ்வரசிங்கம், ஒப்பிலாமணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும், ஸ்ரீபிரியாவின் (லண்டன்) அன்பு மாமனாரும், ஆதிரா, இஸ்வர்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் மஞ்சுளாதேவி, யோகலட்சுமி, காந்தமலர், சரோஜாதேவி, ஜெயகௌரி, சத்தியபிரபாகினி, வித்தியகாந்தன் மற்றும் காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 2025.01.27ஆம் திகதி திங்கட்கிழமை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் பி.ப 4.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக கிளிவெட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்,
0775641766