காலி, அங்குலகஹா பகுதியில் இன்று (26) காலை மூன்று பஸ்கள் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான முதற்கட்ட தகவலின்படி, ஓடிக்கொண்டிருந்த இரண்டு பஸ்கள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 04 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும், மீதமுள்ளவர்கள் இமதுவ மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1