வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று (25) காலை பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்டபோது, அதே இடத்தில் மீனவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, மற்றொரு படகில் இருந்து வின்சன் பெனடிட் நின்ற படகின் மீது மூன்று தடவைகள் தாக்குதல் நடத்தி, அந்த படகை மூழ்கடிக்க முயற்சித்தனர்.
இந்த தாக்குதலில் காயங்களுடன் படகிலிருந்து தூக்கி எறியப்பட்ட வின்சன் பெனடிட் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில், அவர் தொழிலுக்குச் சென்ற மற்றொரு மீனவரால் காப்பாற்றப்பட்டார்.
தகவலின்படி, அவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தைப் பற்றிய மேலதிக தகவலுக்கு ஊடகவியலாளர்கள் மருதங்கேணி வைத்தியசாலையில் சென்றபோது, பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாச தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.