யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 42 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை திருகோணமலை கம்பகொட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சின்தக விமலசேன எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வயல் காவலுக்கு சென்ற வேளையில் யானை வயலுக்குள் நின்ற நின்றிருந்தது. இதன் போது, யானையை விரட்ட முற்பட்ட வேளையிலே, யானை துரத்தி தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.