யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் இன்று (24) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, விதிகளை மீறி மாணவர்கள் மீது நடைபெறும் விசாரணைகளை உடனடியாக நிறுத்துவது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது, விரிவுரையாளர்களின் மீது நடைபெறும் முறைகேடுகளை பாரபட்சமின்றி விசாரிப்பது, மாணவர்களின் கற்றல் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை இக்கோரிக்கைகளில் அடங்குகின்றன.
தீர்வு கிடைக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென மாணவர்கள் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1