26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

9 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே மற்றும் மற்றொரு சந்தேக நபர் ஆகியோர் இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவுபடுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 9 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று (24) நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதற்கிணங்க, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெங்கு அபிவிருத்தி சபையின் புதிய கொள்கை

east tamil

வாகன விபத்துகளால் கடந்த 24 மணித்தியாலத்தில் நால்வர் பலி

east tamil

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம்: சீ.வீ.கே. நன்றி!

Pagetamil

கடவுச்சீட்டு தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கேள்வி

east tamil

திருடிய இடங்களில் “BATMAN” என எழுதி வைத்த திருடன் சிக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment