உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமேசோன், பல நாடுகளில் கிளை அலுவலகங்களை பரவலாக கொண்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயங்கிவரும் அமேசோன் நிறுவனத்தின் ஏழு கிளை அலுவலகங்கள், நட்டம் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் காரணமாக, அங்குப் பணியாற்றி வந்த 1,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊழியர்களுக்கான பணி நீக்க நிவாரண திட்டங்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் பற்றிய மேலதிக தகவல்களை, அமேசோன் நிறுவனம் வழங்குமா என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமை, அமேசோன் நிறுவனத்தின் ஊழியர்களிடையே மட்டுமல்லாமல், உலகளாவிய தொழில்துறையிலும் கவலை ஏற்படுத்தியுள்ளது.