திருகோணமலை அடம்பொடை கிராமத்தில் சுமார் 2 வருடங்களாக அறநெறி பாடசாலை வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இவ் வகுப்புக்களை நடாத்துவதற்கான உரிய கட்டட வசதிகள் இல்லாமை குறித்து அறநெறி ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அடம்பொடை சித்தி விநாயகர் ஆலயத்திலேயே தற்போது அறநெறி வகுப்புக்கள் இடம்பெறமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் ஆலய விக்கிரகங்கள் சில வாரத்திற்கு முன்னர் திருடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2003 ஆகஸ்ட் முதல் 20 தொடக்கம் 30 வரையான மாணாக்களைக் கொண்டு அறநெறி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் உரிய கட்டடமின்றி பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாக அறநெறி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை நிலவும் வேளைகளில் வகுப்புக்களை நடாத்த தாம் பெரும் இன்னல் அடைவதாகவும், மாணாக்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளதோடு, அடம்பொடை மக்கள், இப் பிரதேச மாணவர்களின் கற்றலை துரிதப்படுத்த இவ் அறநெறி வகுப்புக்களை நடாத்துவதற்கான கட்டடம் கட்ட உரிய இடத்தினை கோரி நிற்கின்றனர்.