வவுனியாவில் ஒருவர் கொலை

Date:

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

கொலையைச் செய்த 30 வயதுடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்